தாராபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

தாராபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம்: திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியபாமா தலைமை வகித்தார். இதில் கட்சியின் நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகரப் பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நேரடியாக சென்று மக்களுடன் மக்களாக இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும், தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சத்தியபாமா வலியுறுத்தினார்.

நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் அடிக்கடி கட்சி கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். அதிகளவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் வீரியமாகவும் ஒருங்கிணைந்தும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் வேகமாக கொண்டு சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பல்வேறு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், வரும் காலங்களில் தாராபுரம் தொகுதியில் கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட செயலாளர் சத்தியபாமா வலியுறுத்தினார்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக் 

No comments:

Post a Comment

Post Top Ad