தாராபுரம் 29-வது வார்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

தாராபுரம் 29-வது வார்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

29-வது வார்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சத்தியபாமா நேரில் ஆய்வு – உடனடி நடவடிக்கைக்கு உறுதி!

தாராபுரம்: திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம், தாராபுரம் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் பைப் லைன் அமைக்கும் பணிகள் தொடங்கின.

பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தை திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி சத்தியபாமா அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண, தாராபுரம் நகரச் செயலாளர் அபுதாஹிர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இப்பணிகள் தொடங்கியுள்ளன.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட கழக செயலாளர் சத்தியபாமா அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்த சத்தியபாமா அவர்கள், “பொதுமக்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

மக்களின் பிரச்சினையை நேரில் கேட்டறிந்து, களத்திற்கே சென்று ஆய்வு செய்து, தீர்வுக்கான நடவடிக்கையை உறுதி செய்த மாவட்ட கழக செயலாளர் சத்தியபாமா அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்

No comments:

Post a Comment

Post Top Ad