திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2026

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்றது


தமிழ்நாடு காவல்துறை சட்டம் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்த புதிய உத்தரவின் படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் பொதுமக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் இதனை ஒட்டி தற்போது திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில்  இன்ஸ்பெக்டர் விஜயா அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக எழுதி அவரிடம் கொடுத்தனர் உடனடியாக தீர்வு காண வேண்டிய மனுக்களை உடனடியாக தீர்வு காணப்பட்டது மேலும் கால அவகாசம் தேவைப்படும் மனுக்களை பெற்று கொண்டு அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது என மனுதாரருக்கு தெரிவித்தார் முகாமில் இன்ஸ்பெக்டர் விஜயா அவர்கள் மனுதாரர்களை நாற்காலிகளில் அமர வைத்து கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு கொண்டு மனுக்களை பெற்றார் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளை அவரிடம் கூறினார்கள் பொறுமையுடன் கனிவுடன் கேட்டு கொண்டு பிரச்சனைகளுக்குரிய தீர்வினை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார் இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் தற்போது நடைபெறும் இந்த மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொள்ள வரும்பொழுது மிகவும் ஒருவித பயத்துடன் வந்தோம் ஆனால் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் தங்களிடம் அணுகிய முறை கனிவுடன் பேசியது அமர வைத்து எங்கள் பிரச்சனைகளை கேட்டது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று கூறினர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad