திருப்பூர் புறநகர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் அவிநாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை தெருவோர வியாபாரிகளை அப்புறடுத்தக் கோரி நகராட்சி எடுத்த நடவடிக்கையை கண்டித்து ஏ ஐ டி யு சி தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 21 காலை முற்றுகை போராட்டம் 10 மணி முதல் முற்றுகைப் போராட்டம் ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்தப் போராட்டத்தில்
அவினாசி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நியாயமான முறையில் ஒருதலைப் பட்சமாக இல்லாமல் தெருவோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமாய் கோரிக்கை வைக்கப்பட்டது இது சம்பந்தமாக அதிகாரிகள் வியாபாரிகள் சங்கத்தினர் தரப்பில் சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது நகராட்சி நிர்வாகம் தெருவோர கடை க்காரர்களை கடை வைக்கக் கூடாது என்று கூறினார் ஆனால் தெருவோர கடை வியாபாரிகள் மற்றும் சங்கத்தினர் கடை போடுவோம் என கூறினார்கள் இது பற்றி சங்கத்தினர் கூறும் பொழுது அவிநாசியில் விற்பனை செய்யும் பகுதி விற்பனை செய்யக்கூடாத பகுதி என பிரித்துள்ளதாகவும் இதற்கு கமிட்டி நியமனம் செய்துள்ளதாகவும் அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில்தான் சாலையோர வியாபாரிகள் கடை போட அனுமதிக்கவில்லை என நகராட்சி நிர்வாகம் கூறியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சார்பில் சங்க நிர்வாகிகள் கமிட்டியை கலைத்து விட்டு தங்களது நிர்வாகிகளையும் சேர்த்து புதிய கமிட்டியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதை நிராகரிப்பதிலேயே அதிகாரிகள் இருந்தனர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வியாபாரிகள் மற்றும் சங்கத்தினர் நகராட்சி வளாகத்தில் மதிய உணவு அருந்திவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் இந்த பிரச்சனைக்கு ஆணிவேர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் ரோட்டில் உள்ளபெரிய பெரிய கடைக்காரர்கள் முன்புறம் சாலையோர வியாபாரிகளை தங்களது கடைகளுக்கு முன்புறம் கடைகள் அமைக்க விடாது நகராட்சி நிர்வாகத்தை தூண்டி விடுவதாகவும் மாலை முதல் இரவு வரை இந்த பகுதிகளில் பலகார கடைகள் உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் தள்ளு வண்டியில் செயல்பட்டு வருகிறது இது போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது இதைப் பற்றி அவிநாசியில் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அது விற்பனை செய்யும் பகுதி என்று பிரித்து உள்ளதாக கூறுகின்றது அதாவது எந்தப் பகுதியில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை பெரிய பெரிய கடை முதலாளிகள் தான் முடிவு செய்ய வேண்டிய நிலைமை அவிநாசி நகராட்சி நிர்வாகத்தில் உள்ளது ஏ ஐ டி யு சி தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment