தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சென்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார்
இதனால் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக அதிமுக தவெக நாம்தமிழர் கட்சி கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் தற்போது தவெக கழகத்தின் சார்பில் போட்டியிடும் சத்தியபாமா முன்னாள் எம்எல்ஏ அவர்கள் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட குண்டடம் வெறுவேலம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது அந்த கிராமத்து மக்கள் திரளாக நின்று சத்தியபாமா அவர்களை திரும்பி போக சொல்லியும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லியும் கோஷங்களை எழுப்பியதால் அதிர்ந்து போன
தவெக வேட்பாளர் சத்தியபாமா பொதுமக்களை சமாதானப்படுத்தி பேசினார் இருந்தாலும் பொதுமக்கள் மேலும் மேலும் கோஷமிட்டு திரும்பி செல்லுமாறு கூறியதால் வேறு வழி இன்றி பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டார் மக்கள் கடும் எதிர்ப்பு ஏன் தாராபுரம் அதிமுகவின் கோட்டை என்றே சொல்லலாம் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் இரட்டை இலையில் போட்டியிட்டபோது தாராபுரத்தில் வேறு சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓட்டு கேட்டார் ஆனாலும் தாராபுரம் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட்டனர் என்பது வரலாறு
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment