திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆன நிலையில் திடீரென தனது எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார் இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது அதில் திமுக சார்பில் சுகன்யா,
தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி ,
நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, சிபிஐ சார்பில் லட்சுமணன் ஆகியோரை அந்தந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது இதனால் இந்த தாராபுரம் தொகுதி சட்டமன்றத் தேர்தல் 5 முனை போட்டியாக உருவெடுத்துள்ளது தாராபுரம் சட்டமன்ற வேட்பாளர் பொறுப்பிற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுகவிலிருந்து
தவெகவிற்கு தாவிய முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா வந்த பொழுது அதிமுகவினர் பெருமளவில் அங்கு கூடி துரோகி துரோகி என்று கூச்சலிட்டனர் இதனால் அந்த பகுதி முழுவதும் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஜெயித்து சில மாதத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது தாராபுரம் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மக்கள் வரிப்பணம் வீண் ஆகின்றது இதை போட்டியிட்டு வெற்றி பெறும் எம் எல் ஏக்கள் உணர வேண்டும் இதற்கு முடிவு கட்ட தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment