திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு சுகாதார நிலையம் ரெடி செவிலியர்கள் ரெடி மருத்துவர்கள் இல்லை சுகாதாரத்துறை அலட்சியம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 September 2026

திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு சுகாதார நிலையம் ரெடி செவிலியர்கள் ரெடி மருத்துவர்கள் இல்லை சுகாதாரத்துறை அலட்சியம்



திருப்பூர் மாநகராட்சி  பத்தாவது வார்டில் கட்டப்பட்டுள்ள  சுகாதார       நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு

திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு ஓம் விநாயகா நகரில் கட்டி ஒரு வருடங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் தற்போது அங்கு மருத்துவர்கள் இல்லை செவிலியர்கள் மட்டும் வந்து கதவை திறந்து வைத்து உள்ளே இருக்கின்றார்கள் மருத்துவர்கள் கொடுக்க வேண்டிய மருத்துவத்தை செவிலியர்கள் எப்படி கொடுப்பார்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே பத்தாவது வார்டு மற்றும் 14 வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையாகும் ஏனென்றால் இந்த சுகாதார நிலையம் மருத்துவர் உடன் செயல்படாததால் இந்த பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தொழிலாளர்கள் மாணவ மாணவிகள் குழந்தைகள் தங்கள் மருத்துவ தேவைக்கு 15 வேலம்பாளையம் செல்ல வேண்டியது  உள்ளது அங்கு சென்றாலும் அங்கும் போதிய அளவில் மருத்துவர் இல்லை நீங்கள் திருப்பூர் தலைமை மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று நோயாளிகளை அனுப்பி விடுகின்றனர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையின் பெற்றோர்கள் அனுப்பர்பாளையத்திலிருந்து குழந்தை உடல்நிலை சரியில்லை என்று 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தைகள் மருத்துவர் இல்லை என்று சொல்லி திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டனர் அவர்களும் தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று உள்நோயாளிகள் பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு போதிய மருத்துவம் கிடைக்காமல் அவதிப்படும் நிலைமை உள்ளது சென்ற ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 15 வேலம்பாளையம் மருத்துவமனை மருத்துவர்கள் இல்லாமல் தற்போது பொதுமக்கள் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது இதை உடனடியாக தமிழ்நாடு அரசு சரி செய்து  அனைத்து துறைகளுக்கும் மருத்துவர்களை 15 வேலம்பாளையம் மருத்துவமனைக்கும் பத்தாவது வார்டு ஓம் விநாயக நகரில் கட்டப்பட்டுள்ள நகர்புற துணை சுகாதார நிலையத்திற்கும் நியமிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் தொழிலாளர்களின் பள்ளி குழந்தைகளின் கோரிக்கையாக உள்ளது நிறைவேற்றுமா இந்த தமிழக வெற்றிக்கழக அரசு

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக பொருள் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad