திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தல் கடந்த 21/2/ 2020 அன்று முதல் ஊரக கிளை தேர்தல் நடந்து முடிந்ததன் தொடர்ச்சியாக பேரூராட்சி, நகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கான தேர்தல் வரும் 22/ 4/ 20 22 அன்று நடைபெற உள்ளது, தேர்தல் ஆணையராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு, பரந்தாமன் தலைமைகழக பிரதிநிதியாக வருகை தந்து தேர்தல் நடத்தி தர உள்ளார்கள், உடுமலை நகரம், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, ஆகிய பேரூர் கழகங்கள் பகுதிக்கான வேட்புமனுவை உடுமலை பழனி சாலையில் ஜோல்டு டவரில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்திலும் சங்கராமநல்லூர், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், ஆகியபேரூர் கழகங்கள் பகுதிக்கான வேட்பு மனுவை மடத்துக்குளம் சாலையில் உள்ள சூர்யா மஹாலில் தேர்தலுக்கான வேட்பு மனுபெறுதல், பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வழங்குதல், ஆகிய பணிகள் எதிர்வரும் 22/4/2022 வெள்ளிக்கிழமையன்று காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனு படிவங்களை பெற்றுக் கொள்ள உள்ளார்கள், அவைத் தலைவர் பதவிக்கு ரூ 100, செயலாளருக்கு ரூ 100, துணைச்செயலாளர் இருவர் (ஆண் ஒன்று) (பெண் ஒன்று) தலாரூ 100 ,பொருளாளர் ரூ100, செயற்குழு உறுப்பினர் ரூ 20 கட்டணம், ஆகும் போட்டியிட விரும்புவோர் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் படிவம் ஒன்றுக்கு ரூ 25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பகட்டணத்துடன் தலைமை கழக பிரதிநிதியிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு மாவட்டக் கழகபொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட இருபத்தி ஏழாவது வார்டுக்குண்டான செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட வேட்பாளர் விண்ணப்பதாளை திருப்பூர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் ந.தினேஷ் குமார் மற்றும் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோரிடமிருந்து இருபத்தி ஏழாவது வட்டக் கழக செயலாளர் தீப்பெட்டி ரவிச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment