வயதான மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளிக்க வந்திருப்பதாக அறிந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ .ஜி.பாபு இ.ஆ.ப தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்து பொதுமக்கள் காத்திருப்பு அறையில் அந்த மாற்றுத்திறனாளி முதியவரிடம் புகார் மனு பெற்று அதன் விபரம் கேட்டறிந்தார் பிறகு அவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இந்த மனிதநேயமுள்ள செயலை கேள்விப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு அமைப்பினர் தங்கள் அமைப்பு சார்பாக நன்றி தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆய்வாளர் அவர்களின் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தங்களுடைய புகார் மனுவை கொடுக்க அவ்வப்போது வருவதுண்டு அந்தவகையில்வயதான மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் மனு அளிக்க வந்தார் அவரை பொதுமக்கள் காத்திருப்பு பகுதியில் அமர வைத்தனர்.
No comments:
Post a Comment