அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற மாட்டு வண்டி குதிரை வண்டி தீர்த்த ஊர்வலம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 April 2022

அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற மாட்டு வண்டி குதிரை வண்டி தீர்த்த ஊர்வலம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் நீண்ட நாட்களாக நிறவேறாத கனவு திட்டமாகவே இருப்பதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர், இந்த திட்டம் இந்த‌ ஆட்சியிலாவது விரைவில் நிறைவேற வேண்டுமென விவசாயிகளின் எதிர்பார்ப்பு தமிழககட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அவிநாசி அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வரை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அத்திக்கடவு அவினாசி திட்டம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் அவர்கள் இந்த ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர் இதில் விவசாயிகள் பொதுமக்கள் பெண்கள் கலந்துகொண்டனர்.


மேலும் அத்திக்கடவு அவினாசி திட்டம் போராட்டக் குழுவின் சார்பில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தகுடம்எடுத்துச் சென்று அவரவர் பகுதிகளில் வைத்து வழிபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad