திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இங்கு வருடா வருடம் தேர் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும், மேலும்15நாள் சாட்டு கம்பம் நடுதல் குட்டை திடலில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக இசைக்கலைஞர்கள், சினிமா இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், மெகா ராட்டினம் முதல் அனைத்து விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும், தேரோட்டம் நடைபெறும் தேரோட்டம் முடிந்தவுடன் வானவேடிக்கை நடைபெற்று விழா இனிதே நிறைவேறும்.
இதில் உடுமலை பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிராம மக்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பாகவே குட்டை பகுதி பொது ஏலம் விடப்படும் இந்த வருடம் 2022 வருவாய் துறைக்கு சொந்தமான குட்டை திடல் நிர்ணயிக்கப்பட்ட தொகை அதிகமாக இருந்த காரணத்தால் 5 முறை ஏலம் போகாத நிலையில் 6வது முறையாக ஏலம் நடந்தது, இதில் 41லட்சத்து 67ஆயிரத்து 500ரூபாய்க்கு ஏலம் போனது. 2022 தேர் திருவிழா வருகிற 21ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது தாமதமாக ஏலம் போனதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment