திருப்பூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர், சாக்கடை நீர், தேங்கும் நிலை உள்ளது பல ஆண்டுகளாக இந்த நிலைமை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது, தற்போதுபெய்த மழைகளில் இதே நிலைமை நீடித்ததால் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ் குமார், துணை மேயர் திரு ரா.பாலசுப்ரமணிய, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார்பாடி ஐ.ஏ.எஸ், மாநகர பொறியாளர் திரு முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர்கள், இளநிலை பொறியாளர்கள், ஆகியோருடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மழையினால் வடிகாலில் தேங்கிய கழிவுகளை விரைந்து அகற்றும் பணி மழைக்காலங்களில் திருப்பூர் மாநகராட்சியில் மழை நீர் அதிகம் தேங்கும் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வினியோக நாள் இடைவெளியை குறைக்கவும், ஆலோசனை நடைபெற்றது.
இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து பொது மக்களுக்கு நிரந்தர தீர்வினைக் காணும் வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment