திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் அவர்கள் பதவி ஏற்ற பிறகு திருப்பூரில் பல அதிரடி மாற்றங்களைசெயல்படுத்தி வருகிறார், அந்த வகையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தக்கூடிய இடம் இதில் சுகாதார கேடு மற்றும் தேவையில்லாத நபர்கள் நடமாட்டம் , இரவுநேரங்களில் பயணிகளுக்கு தொந்தரவு என்ற பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
இங்கு குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது காவல் கண்காணிப்பு அறையும் இங்கு உள்ளது இதையும் மீறி சில தவறுகள் நடைபெறுவதால் இதுபற்றி பயணிகள் மேயர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் நேற்று இரவு திடீர் என்று புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துதுறை அதிகாரிகள், அனைவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுஆய்வுமேற்கொண்டார்.
இந்த நடவடிக்கைஅதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து 60 வார்டுகளிலும் நடைபெறும் சாலை, சாக்கடை வேலைகள் தரமானதாஎன்று திடீர் ஆய்வு வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment