திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக கமலவேணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்இந்நிலையில்ஊராட்சி மன்ற கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவரான கமலவேணி அவர்களின் கணவர் கலையரசு தொடர்ந்து ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார் என்றும் மாதாந்திர கூட்டம் நடைபெறும் போது வரவு செலவு கணக்கு நகல் மற்றும் தீர்மானங்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது நடைமுறை அதையும் கொடுப்பதில்லை உறுப்பினர்களின் கேள்விக்கு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பதிலளிக்கிறார் என்றும் இந்தநடவடிக்கையை கண்டித்து 1 ,2 ,3 ,5, 8, வார்டு உறுப்பினர்கள் கூட்டஅரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடத்தூர் ஊராட்சி மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் உள்ள பதவிகளில் அவர்களின் கணவர் பெற்றோர் உறவினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்பது அரசு உத்தரவு அதை மதிக்காமல் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கலையரசு அவர்கள் நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
No comments:
Post a Comment