திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி கொங்கல்நகரம் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கறித்தொட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது இதில் இருந்து நச்சுப் புகை வெளியேறுகிறது இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் தோல் நோய் உண்டாகிறது நிலத்தடி நீர் மாசுபடும் நிலையுள்ளது கால்நடைகள், விவசாயிகள், பாதிப்படைகின்றனர். எனவே இந்த தொழிற்சாலை அரசால் தடைசெய்யப்பட்டிருந்தது.
தடை செய்யப்பட்ட இந்த தொழிற்சாலை அத்துமீறி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது இதை அரசு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் பார்வைக்குக் கொண்டு சென்றோம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஊராட்சி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளவில்லை முறைகேடாக நடைபெறும் இந்ததொழிற்சாலையை சீல் வைக்க வேண்டும் என்றும் இந்த முறைகேடான செயலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினித் ஐஏஎஸ் அவர்களிடம் சமூக ஆர்வலர் எ.மந்திராசலம் புகார் மனு கொடுத்தார்.
No comments:
Post a Comment