இதற்கு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநில துணை பொதுச்செயலாளர் எம். என். சந்திரன்அவர்கள் தலைமையேற்க மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், பின்னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் .வினித் ஐஏஎஸ் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் வசிக்கும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குறவர் இன மக்களின் கோரிக்கையாகும்! 1957களில் தவறாக "நக்கலே" என்ற ஜாதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றுகிற போது தவறுதலாக நரிக்காரர் என்பதற்கு பதிலாக நரிக்குறவர் என்று பதிவு செய்யப்பட்டு விட்டது நக்கலே என்பதன் உண்மையான அர்த்தம் நரி பிடிப்பவர்/ நரிக்காரர் என்பதாகும், நடந்து விட்ட மொழி பெயர்ப்பு தவறை நீக்கி உலகெங்கும் வசிக்கும் 13 கோடி தமிழர்களின் தொன்மை வரலாற்றை சிதைக்காமல் சீர்திருத்தம் செய்திட வேண்டியும் சமூக நீதி காக்கும் இன்றைய அரசு இந்த தவறை சரி செய்து தரக்கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment