மாண்புமிகு தமிழ்நாடு முதலமைசச்ர் அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில், தமிழக சடட் மன்றத்தில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உளள் நல்லதங்காள் ஓடை நீர்த் தேக்கப் பாசனப் பகுதியிலுள்ள 4,744 ஏக்கர் பாசன நிலங்களில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும் நல்லதங்காள் ஓடை நீர்த் தேக்கத்திலிருந்து பிரதானக் கால்வாய் மதகு வாயிலாக, இன்று முதல் நாளொன்றுக்கு 35 அடி வீதம் 7 நாட்களுக்கு 21.17 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வேளாண் பெருங்குடி மக்கள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் விவசாய நிலங்களில் பணிகள் மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார், இதனைத் தொடர்ந்து, காங்கேயம் வடட் த்தில் வட்டார அளவிலான தேர்ந்தெடுகக் ப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சியினைத் துவக்கி வைத்து மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில், இன்றைய தினம் வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குழந்தைகளின் நலனை உயர்த்த அக்கறையுடனும் அரவணைப்போடும் செயல்படுதம் கீழ்கண்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் ஊராட்சிகளுக்கு சமுதாயத்தில் உள்ள குழந்தைகள் நலனை மேம்படுத்தும் பொருட்டு கூறுமாறு வலியுறுத்தலாம்.
கடுமையான மற்றும் மிதமான சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும், அங்கன்வாடி மையத்தில் தரப்படும் இணை உணவுகளை சரியாக குழந்தைகள் உண்ணுமாறு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் இந்த உணவின் அவசியத்தை பெற்றோருக்கு எடுத்து கூற வேண்டும். முன் பருவக்கல்வி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கான கூட்டங்கள் நடத்தி அதில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.
ஊராட்சி தலைவரின் தலைமையில் கிராம சுகாதார ஊடட்ச்சத்து தினம் நடத்துப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்பட செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தின் கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி கழிப்பறை வசதி இவற்றை சீரமைக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். அங்கன்வாடி மைய நிலையில் உள்ள குழுவில் பங்கு பெற்று அதற்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
சத்தான காய்கறிகள் சுலபமாக கிடைக்கும் விதத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் இதில் ஊராட்சி தலைவர்கள் முக்கிய பங்காற்ற, தாய்மாhக் ளை குழுக்களாக அமைத்து, அவாக் ளின் பொறுப்புகளை விவரித்து கூறி சத்துணவு ஆரோக்கியம் குழந்தைகளின் நலன் போன்ற செய்திகளை உரிய முறையில் அனைவருக்கும் சென்று சேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். போஷன் ஊராட்சி என்கிற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காண உதவலாம். அவர்களின் ஆரோக்கியம் மேம்பட எதிர்காலத்தில் அனைத்து நலன்களைப் பெற இது நிச்சயம் வழி வகுக்கும், ஆக ஊராட்சி தலைவர்களின் பங்கு, சமுதாயத்தில் உள்ள குழந்தைகளின் உடல் மனம் இவைகளின் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது.
இப்பணியை மிகந்த அக்கறையுடனும், அரவணைப்போடும் அவர்கள் வழி நடத்திச்செல்ல வேண்டும். ஊராட்சி தலைவர்கள் தங்களது ஊராட்சி, "ஊட்டச்சத்து குறைபாடில்லா ஊராட்சியாக" உருவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார். பின்னர் காங்கேயம் காயத்திரி உணவு விடுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி கையேடு மற்றும் ரூ.100 ரொக்கம் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக, மூலனூர் பேரூராட்சியில் நாச்சிபாளையம் சாலை முதல் புதுக்கோட்டை பிரிவு வரை மற்றும் புதுக்கோட்டை பிரிவு முதல் கரூர் - தாராபுரம் சாலை வரை என இரண்டு சாலைப்பணிகளை ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த தார்சாலை புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமராவதி வடிநிலக்கோடட் செயற்பொறியாளர் திரு.முருகேசன், தாராபுரம் வருவாய் கோட்டாடச்சியர் திரு.குமரேசன், திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் திரு.இல.பத்மநாபன், உதவி செயற்பொறியாளர் திரு.மோகன், திருப்பூர் மாவடட் திட்ட அலுவலர் திருமதி.கு.மரகதம், மூலனூர் பேரூராட்சி தலைவர் திரு.தண்டபாணி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு.செந்தில்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment