திருப்பூரில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 April 2022

திருப்பூரில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை!

ஆட்சியர் திரு வினித் IAS அவர்கள் அதிரடி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு உணவகங்களில் சோதனை செய்தனர்.


அப்போது மீண்டும் மீண்டும் சமையலுக்கு எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எண்ணைகளை சேகரித்து பயோ டீசல் ஆக மாற்றலாம் என்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பெற்று பயோடீசல் ஆக மாற்றுவதற்கு ரூகோ(RUCO) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இதற்கு முகவர்கள் உள்ளனர் என்றும் உயர்தர உணவகங்கள் முதல் ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் வரை கணக்கெடுத்து சமையல் எண்ணெய் பயன்பாடுகள் மீதம் ஆகும் எண்ணெய் ஆகியவற்றை கண்காணித்து அவர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது என்றும் மாவட்ட ஹோட்டல் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மூலமாக இந்தத் திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தியதாகவும் பொதுமக்களின் உடல் நலத்தை காக்க இது போன்ற நல்ல திட்டங்களை வியாபாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad