திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அடுத்த அனுப்பர்பாளையத்தில் 1912ல் ஆரம்பித்து 1913ல் வேலைகளை முடித்து திறக்கப்பட்ட பள்ளி ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில் இங்கு 1. வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மட்டுமே உள்ளது, மேலும் அனுப்பர்பாளையத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு 6, 7, 8 வகுப்பு படிப்பதற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையைக் கடந்து அனுப்பர்பாளையம் புதூரில் இருக்கும் பள்ளிக்கும், 15 வேலம்பாளையம் பள்ளிக்கும் செல்ல வேண்டிய உள்ளது.
எனவே இப்பள்ளியின் தரத்தை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உயர்த்திட கோரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், 14வது வார்டு திமுக செயலாளருமான M. ரத்தினசாமி, பத்திர தொழிற்சங்க செயலாளர் வேலுசாமி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் திமுக மாணவரணி இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள், மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment