திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மற்றும் வெள்ளி தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பேருந்திலிருந்து இறங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் அதையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஏற்பாட்டின்படி மாவட்ட மாற்றுத்திறனாளி துறை மூலம் சுமார் ஐந்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய பேட்டரி வாகனத்தை கடந்த திங்கள் கிழமையில் இருந்து மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதுபற்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் ஐ ஏ எஸ் அவர்களுக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கும் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment