திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது! தாலுகா அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்படாத கட்டிடம் மேற்கூரை கம்பிகள் துருப்பிடித்து இடிந்து சிமெண்ட் பூச்சு ஒரு பகுதி கீழே விழுந்தது, அதை புகைப்படம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இதை பார்த்து தள்ளி ஓடியதால் அவர் தலை தப்பியது.
இதுபற்றி அங்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது இந்த கட்டிடத்திற்கு வருவதற்கே பயமாக உள்ளது என்றும், அந்த சமூக ஆர்வலர் தலை தப்பியது பெரிய விஷயம் என்றும் பொதுப்பணித்துறையினர் உடனடியா நடவடிக்கை எடுத்து இதை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment