திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட எலையமுத்தூர் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து சோலார் நிறுவனம் அமைத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள்கட்சி மடத்துக்குளம் ஒன்றியசெயலாளர் திருப்பதி உள்ளிட்ட விவசாயிகள் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
மேலும் இதுபற்றி அந்த மனுவில் கூறியிருப்பதாவது எலையமுத்தூரிலிருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புல எண் 521/3 அருகில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
இது விவசாய நிலம் இந்த நிலத்தில் நீர்நிலை குளம் உள்ளது குளத்தில் இருந்து வெளியேறும் நீர் நிலை பாதையை சோலார் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது இந்த குளத்தை நம்பி சுமார் 5000 ஏக்கர் பாசன வசதியை விவசாயிகள் பெறுகின்றனர் ஆகவே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ள சோலார் நிறுவனத்தை அகற்றி குளத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை, எடுத்து உதவுமாறு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காத்திட தமிழ் புலிகள் கட்சி மற்றும் விவசாயிகள் சார்பாகவும் கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment