திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சித்தராவுத்தன் பாளையம் கிராமம் கடந்த 1986ஆம் வருடம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி நகரில் 57 மனை பிரிவுகள் தாராபுரம் பதிவுத்துறை முன்னிலையில் சுத்த கிரையம் பெற்றனர், தற்போது 57 மனை பிரிவுகளில் 24 மனை பிரிவு நில உரிமையாளர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.
முப்பத்தி மூன்று மனை பிரிவுகளை கொண்டவர்கள் வீடு கட்டாமல் இருந்த நிலையில் சிலர் அந்த நிலங்களைஆக்கிரமிப்பு செய்து கொண்டு மிரட்டுவதாகவும் காவல்துறை வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு துணை போவதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்கள்.
சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த வீரபாண்டி சிறப்பு உதவிஆய்வாளர் சையத் இக்பால் அவர்களும் காவலர்களும் மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர்களை காப்பாற்றினார்கள், இன்று இது இரண்டாவது தீக்குளிப்பு சம்பவம் ஆகும் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது
No comments:
Post a Comment