தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தியதை யடுத்து பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள் என்றும் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் கமிட்டி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர், இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, வர்த்தகரணி, விவசாயஅணி ஆகியவற்றிற்கு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது என்றும் கோவில் வழி பஸ் நிலையத்தை நிரந்தரமாக்கப்படும் என்று அறிவித்த மேயர் என், தினேஷ் குமார் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, அவரிடம் தஞ்சாவூர், திருச்சி மார்க்க பஸ்களை கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும், என்றுகோரிக்கை வைப்பது டெல்லி முதல்வர் அரவிந்கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் ஆகியோரை திருப்பூருக்கு அழைத்து வந்து பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, முடிவில் மாவட்ட நிர்வாகி குமார்நன்றிகூறினார்.
No comments:
Post a Comment