திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கா விட்டாலும் என் பணி மக்கள் பணி செய்வதே என்று தொய்வில்லாமல் தொகுதி முழுவதும் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா, ஜெயராம கிருஷ்ணன் அவர்கள்! தற்போது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தளி பேரூராட்சி வார்டு எண் 12ல் இருந்து கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பொன்னாலம்மன் சோலை வரை பைப்லைன் விரிவுபடுத்தும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா திமுக மாவட்ட பொறுப்பாளர், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா, ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தளி பேரூராட்சி மன்றத் தலைவர் உதயகுமார், மாவட்ட கவுன்சிலர் மலர்விழி பாபு மற்றும் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment