திருப்பூர் மாவட்டத்தில் எளிய மக்களுக்கு ஒதுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு ஏழை மக்களுக்கு ஒதுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வசதியுள்ளவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வீடு பெறுவதில் முனைப்பாக இருக்கும் நிலை உள்ளது என்று அன்னை இந்திரா காங்கிரஸ் பொது நல தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக குற்றம்சாட்டுகின்றனர்.
வீட்டுவசதி வாரிய அலுவலர்களை தொடர்புகொண்டு பணம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேட்டால் 51 லட்சம் 81லட்சம் 1/1/2 லட்சம் என்று ஒவ்வொரு விதமாக சொல்லி ஏழை எளிய மக்களை அலைகழிக்கிறார்கள்என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் துரைசாமி அவர்களும் சமூக சேவகர் தாயகம் மூர்த்தி BJP அவர்களும் பொதுமக்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வசதியானவர்களின் வாரிசுகள் வீடு இடம் இல்லை என்று வீடோ இடமோ பெற்றிருந்தால் உண்மையான ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்என்பதை அரசு கவனிக்க வேண்டும் அப்படி அரசை ஏமாற்றி வாங்கி இருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்என்றுசட்டம் இயற்ற வேண்டும் என்பதே ஏழை மக்களின் எதிர்பார்ப்பு
No comments:
Post a Comment