மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான விவசாயத் தொழிலை நடத்த இந்த வங்கியில் நகை கடன், பயிர் கடன் என்று வாங்கி விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர் இந்நிலையில் கூட்டுறவு வங்கி செயலாளர் விவசாயிகளின் பெயரில் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் பயிர் கடன் தள்ளுபடியில் ஆள்மாறாட்டம் செய்து பெரும் மோசடி செய்துள்ளதாகவும் அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் அதிகாரிகள் பார்வைக்கு இந்த பெரும் மோசடியை கொண்டு சென்றும் அதிகாரிகள் மெத்தனப் போக்கையே கடைபிடிப்பதாகவும் கூறி சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை சங்க அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் இந்ததொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த தலைவர் செயலாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபடுவதாகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
No comments:
Post a Comment