கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்1.
தடாகாலத்தில்தன்னுடன்தன்மகனையும் சிறைச்சாலைக்கு உட்படுத்தியவர்தளிமாரிமுத்து அவர்களின் மறைவுக்கும், 25வது வட்ட செயலாளர் கராத்தே சோமசேகரன் அவர்களின் தாயார் பங்கஜம் அவர்கள் மறைவுக்கும், கழகத் தோழர் இடுவாய் பாலு அவர்களின் மறைவிற்கும், கூட்டத்தில் இரங்கல் தெரிவித்தும்,
தீர்மானம் 2.
நடந்து முடிந்த 28வது பொதுக்குழுவில் எடுக்கப்பட்டமுடிவின்படி கழகத்தின் அமைப்பு தேர்தலை மாநகர் மாவட்டத்தின்அனைத்து வார்டுகளிலும் நடத்திட ஏதுவாகபுதியஉறுப்பினர்களை சேர்ப்பது எனவும்,
தீர்மானம் 3.
நடந்துமுடிந்தபொதுக்குழுவில் துணை செயலாளர்களாக திரு. ஆடுதுறை முருகன் (ம) திமு. ராஜேந்திரன் அவர்களுக்கும், கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்மவர் திரு. துரை வைகோ அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தும்:
தீர்மானம் 4.
நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு. அரிமா .ஆர். நாகராஜ் .திருமதி எஸ் சாந்தாமணி. திரு.சுகு குமார் ஆகியோருக்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தும், மூவரின் வெற்றிக்கும் கூட்டணி கட்சியின் சார்பில் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பணியாற்றிய கழகத் தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தும்;
தீர்மானம் 5.
மாநகராட்சி பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, பாதாள சாக்கடை திட்ட பணிகளால் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் தாமதப்படுத்துகிறது மாநகராட்சி பகுதியில் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர் ஆகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய மேயர் திரு. தினேஷ் குமார் அவர்கள் மேற்கண்ட பொது மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மேயரின் நடவடிக்கைகளில் மதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment