பல்லடத்தில் மக்கள் தாகம் தீர்த்த சட்டமன்ற உறுப்பினர்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 April 2022

பல்லடத்தில் மக்கள் தாகம் தீர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சரும் ஆன திரு எம், எஸ் ,எம் ,ஆனந்தன் அவர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன்அவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கொளுத்தும் கோடை காலம் முடியும் வரையில் இந்த நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர், தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்றும் மேலும் இந்த பகுதி பேருந்துநிலையம் மட்டுமின்றி தினசரி சந்தை ,வார சந்தை, என மக்கள் கூட்டம் எப்போதும் காணப்படும் பகுதியாகும் பொதுமக்கள் தங்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறந்துவைத்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம், எஸ் ,எம், ஆனந்தன் அவர்களை பெரிதும் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad