திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரத்திலிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து விட்டது கன்னிமார் கோயில் முருகன் கோயில் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டதால், இதில் பக்தர்களுக்கு பாதிப்பும் இல்லை மேலும் கோயில் ஊழியர்கள் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment