வெள்ளியங்காடு பகுதியில் திராவிட கழகம் சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு என்னும் பெயரில் மத்திய அரசு சமஸ்கிருதக் கல்வி மற்றும் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு இடையூறு செய்யும் விதமாகவும், ஆட்சியின் சிறப்புகள், சாதனைகள், தொடரக்கூடாது என்று ஆளுநர் மூலம் சூழ்ச்சி செய்வதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் நீட்தேர்வு மசோதாவை காலதாமதம் செய்வது சரியல்ல குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுனரின் கடமை என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment