உடுமலையில் வீமன் படப்பிடிப்பு துவக்க விழா! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

உடுமலையில் வீமன் படப்பிடிப்பு துவக்க விழா!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை இது சினிமா படப்பிடிப்பு அதிகம் நடக்கும் ஒரு பகுதியாகும் இங்கு திருமூர்த்திமலை அணைக்கட்டு அமராவதி அணைக்கட்டு கல்லாபுரம் பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்ற தளமாக உள்ளதால் சினிமா படப்பிடிப்பு இங்கு அதிகம் நடைபெறும்.


அந்த வகையில் உடுமலை எம்பி லாட்ஜ் அரங்கில் வீமன் பட துவக்க விழா நடைபெற்றது இதன் இயக்குனர் சமூக நீதிப் போராளி தோழர் கீரா, இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக உடுமலை நகர மன்ற தலைவரும், உடுமலை திமுக நகர செயலாளருமான மத்தீன், 29வது வார்டு  செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான அரச காளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் குமார், அரசு போக்குவரத்து கழக(எல்.எல்.எப் )மாநில தலைவர் சி.டி.சி. சத்தியமூர்த்தி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன். ஈஸ்வரன்,  மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, நாம் தமிழர் பாபு  மற்றும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் திரைப்பட குழுவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad