உயிரைப் பறிக்கும் கிணறு! வேலி அமைக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்!! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

உயிரைப் பறிக்கும் கிணறு! வேலி அமைக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்!!

திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலத்திலுள்ள அங்கேரிபாளையம் வெங்கமேட்டிலிருந்து ஆத்துப்பாளையம் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தரைமட்ட கிணறு உள்ளது அந்த பகுதியில் இருக்கும் சிறுவர்கள் , இளைஞர்கள்  கிணற்றில்குதித்து நீச்சலடித்து விளையாகின்றனர்.


இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது, கடந்த 25 /4 /20 22 அன்று இந்த கிணற்றில் அவிநாசி சேர்ந்த 15 வயது சிறுமி அவருடன் சேர்ந்து 23 வயது நபர்இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த கிணற்றை ஒட்டி மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது, அந்தக் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

மக்கள் உயிர்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் பொறுப்பாளரும் சமூக ஆர்வலருமான ஆர். பழனிக்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர்  டாக்டர் எஸ் வினித்  ஐ ஏ எஸ் அவர்களிடம் மனு கொடுத்தார் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்  

No comments:

Post a Comment

Post Top Ad