அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம்.

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் நிறுவனத் தலைவர் திரு ஜி, கே, விவசாய மணி( எ) ஜி, சுப்பிரமணி அவர்கள் தலைமையில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி, வட்ட, ஊராட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் 58 வயது நிரம்பிய தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ3000 வழங்க வேண்டும், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அரசு உருவாக்கி தர வேண்டும், மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் விபத்தில் உயிரிழக்கும் லோடுமேன், கட்டிடம், மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு உடனடியாக இழப்பீட்டுத் தொகையாக ரூ 5 லட்சம் வழங்க வேண்டும்.


இ,எஸ்,ஐ, மருத்துவமனையில் பாரபட்சமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad