திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 15 வேலம்பாளையம் சொர்ணபுரிஐலண்ட் பகுதியில் 1வது தெரு முதல் 6வது தெரு வரை குடிநீர் பைப் போட்டுள்ளார்கள் ஏழாவது வீதியில் குடிநீர் குழாய் வேலைகள் பாதியில் கிடப்பில் போட்டு விட்டு போய்விட்டார்கள் நாங்கள் சொத்துவரி ஒரு பைசா குறையாமல் கட்டுகிறோம் எங்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே எங்கள் வீதியில் போர்க்கால அடிப்படையில் மெயின் பைப் போட்டு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று சொர்ணபுரி ஐலண்ட் மக்களும் திருப்பூர் ஆம் ஆத்மி கட்சியினரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினித் ஐஏஎஸ் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

No comments:
Post a Comment