திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இதை சேவூர் மற்றும் முறியாண்டம் பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று முறியாண்டம் பாளையம் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில் 5000 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் துணை சுகாதார நிலையம் அமைக்கலாம் என்ற அடிப்படையில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முனியாண்டம் பாளையம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ரவிக்குமார், துணைத் தலைவர் கனகராஜ் மேற்பார்வையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது, சுகாதாரத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment