பல்லடம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

பல்லடம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்ட  நிலையில்  பல்லடம் போலீசார் மற்றும் பல்லடம் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

அதன்படி பல்லடம் பேருந்து நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது இதனிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார்


இந்த நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் நகர திமுகழக செயலாளர் ராஜேந்திர குமார் திமுகழக நிர்வாகிகள் ஜெகதீஷ்,  நடராஜ் மற்றும் காவல் துறையினர், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad