தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுதல் மரக்கன்று நடுதல் என சமூகத்திற்கு நன்மை பயக்கும் சேவைகளை தானும் செய்து தனது ரசிகர்களையும் செய்ய வழிகாட்டுபவருமான ராகவா லாரன்ஸ் அவர்களின் பிறந்த நாள் தினத்தில் திருப்பூரில் கடந்த 8 ஆண்டுகளாக ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்றம் செயல்படுகிறது பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் பொது இடங்களில் 9000 மேற்பட்ட மரக்கன்றுகள் ஆங்காங்கே வழங்கியும் நட்டும் பராமரித்து வருகிறது.

ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்த மன்றத்தின் நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி சுந்தரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜய், ராகவா லாரன்ஸ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மரம் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவிநாசியப்பன் பிரைமரி நர்சரி மருத்துவமனை அருகில் மரக்கன்றுகள் நட்டனர் ஏழை எளிய பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்கள்

No comments:
Post a Comment