உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு (1/11/2022) திருப்பூர் மாநகராட்சி 3 வது மண்டலம் 49 வது வார்டு ஆர் வி இ நகர் பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளருமாகிய க. செல்வராஜ் MLA ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ்குமார், ஆணையர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ், தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி மு. நாகராசன், 3வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா. திமுக பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, கொ.ராமதாஸ், மு.க.உசேன் மற்றும் துணை ஆணையர்களும், மாவட்ட மாநகர திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகுதி சபா கூட்டத்தில் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு அனைத்து துறை அலுவலர்கள் மூலம் மக்களின் குறைகளை எளிதில் நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 30.05 கோடி மதிப்பீட்டில் 32.19 கிலோமீட்டர் 179 சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டன இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றும் நோக்கத்தோடு பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment