திருப்பூர் பூங்கா சாலை இந்த சாலை எப்பொழுதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து பார்க் வரை மோசமாக இருக்கும் இந்த ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் வாகன ஓட்டிகள் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர்.

ஆனால் ஆனால் ஆம்புலன்ஸ் பழுது பார்க்க எடுத்துச் செல்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட்டனர் பின்னர் அவர்களை வழிமறித்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் திரும்பி வந்து மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இந்த பகுதியில் உள்ள சாலைகளை சரிவர நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment