நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு!

திருப்பூரில் பன்னிரண்டாம் தேதி சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு நிகழ்வு நடைபெற உள்ளது தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும்  திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் ஸ்வர்ணம் ஜே நடராஜன் வருகின்ற சனிக்கிழமை 12ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக  காலை10 மணி அளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிவில் வழக்குகள் குடும்ப நல வழக்குகள் சமரசத்திற்குரிய சிறு சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வராகடன் வழக்குகள் என மொத்தம் 110 72 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து க் கொள்ளப்பட உள்ள நிலையில்  பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad