திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசு கடந்த மாதம் 22ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசு ஆணை காரணமாக சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3. 417 பணியிடங்களாக குறைக்கப்பட்டு இருப்பதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் தனியார் மயமாக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் எனவே தமிழக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


No comments:
Post a Comment