கிட்ஸ் கிளப் கல்விக்குழும செயலாளர் நிவேதிகா ஸ்ரீ ராம் வரவேற்றார், ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை வகித்தார், திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 3வது மண்டல தலைவர் சி. கோவிந்தசாமி, சைமா தலைவர் ஈஸ்வரன், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாவா செல்லதுரை, திருப்பூர் வடக்கு திமுக கழக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பல்லடம் அதிமுக எம்எல்ஏ, எம்.எஸ். ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக மோகன் கந்தசாமி அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது கிட்ஸ் கிளப் பள்ளி தலைவரும் அவருடைய மகனுமாகிய மோகன்கார்த்திக் அவர்கள் நினைவு பரிசுகள் வழங்கினார் நிகழ்ச்சி இறுதியில் அத்வைதா ரமேஷ் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment