திருப்பூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பிரமாண்டமான பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

திருப்பூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பிரமாண்டமான பொதுக்கூட்டம்.

திமுக சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது, அந்த வகையில் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் திருப்பூர் 60 அடி ரோடு சிவன் தியேட்டர் முன்பு 9/11/2022 அன்று மாலை 6 மணி அளவில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் திமுக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர்  சிறப்புரை ஆற்றுகின்றனர், இதில் மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் நகர பகுதி ஒன்றிய பேரூர் வட்ட திமுக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி  பிரதிநிதிகள், தொமுச நிர்வாகிகள், திமுக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad