திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் ஐஏஎஸ் தலைமையில் திங்கள் தோறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெறும் இதில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை சாலை வசதி சாக்கடை வசதி பணத்தை முறைகேடு செய்தவர்களிடமிருந்து பணத்தை, நிலத்தை, வீடுகளை மீட்டு தரக்கோரியும் பொதுமக்கள் மனுவாக கொடுத்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் இந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் 549 மனுக்கள் அளித்திருப்பதாகவும் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பரிசீலனை செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment