14 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய டிரைவர் கைது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

14 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய டிரைவர் கைது.


திருப்பூர் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் காவலர்கள் ரமேஷ், சரவணன், சரவணக்குமார், மற்றொரு ரமேஷ் ஆகியோர் பல்லடம் கொச்சி ரோடு கரடி வாவி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினார்கள் லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சேர்ந்த சுதாகர் வயது (28) என்பதும் 5ஆயிரத்து 650 கிலோ ரேசன் அரிசி 8ஆயிரத்து 800 கிலோ குருணை அரிசி இருந்தது தெரிய வந்தது தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசியை கேரளாவுக்கு அனுப்பி வைத்ததாக லாரி டிரைவர் கூறினார் இதை தொடர்ந்து சுதாகரை கைது செய்து ரேஷன் அரிசியையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad