பல்லடத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2023 விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

பல்லடத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2023 விழிப்புணர்வு பேரணி.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை கல்லூரியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் விழிப்புணர்வு பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து என் ஜி ஆர் சாலை வழியாக சென்று பொது மக்களிடம் வாக்காளர்  அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்யலாம் எனவும் வரும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம் என்று பரப்பரை செய்து என்ஜிஆர் சாலை வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு சென்று முடிவடைந்தது.

இந்த பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினித் ஐஏஎஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா மற்றும் வட்டாட்சியர் நந்தகோபால் மற்றும் நகராட்சி ஆணையர் விநாயகம் கல்லூரி முதல்வர் முனியன் உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad