திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரம் வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட 44,45,50 வார்டுகளில் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) கூட்டம் நடைபெற்றது திமுக கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் திருப்பூர் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரம் வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட 44, 45, 50 வது வார்டுகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமாகிய டி கே டி .மு .நாகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடியில் முகவர்கள் நடந்து கொள்ளும் வழி முறைகள் பற்றியும் மேலும் பல்வேறு கருத்துக்களையும் முகவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினர் LM மஸ்சூது பகுதி கழக செயலாளர் மு க உசேன் வட்டக் கழக செயலாளர் முகமது அலி ரபீக், சல்மான் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment