திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பூ மார்க்கெட் தென்னம்பாளையம் வார சந்தை மற்றும் வாகன நிறுத்துமிடம் புதியதாக கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன பணிகள் நிறைவடைந்த நிலையில் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் அதை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் பூ மார்க்கெட் மற்றும் தென்னம்பாளையம் சந்தை கட்டிடங்கள் திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ் வினித்  சட்ட சபை உறுதிமொழி தலைவர் உதயசூரியன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் மரியாதைக்குரிய மாநகராட்சி மேயர்  தினேஷ் குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் 14 ஆவது வட்டக் கழக சார்பாக வட்டக் கழக செயலாளர் மு ரத்தினசாமி மற்றும் பகுதி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad