திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி சுப்பிரமணியம் ஏற்றிவைத்தார் மாநில செயலாளர் சின்னசாமி தொடக்க உரையாற்றினார் மாநில தலைவர் சுப்பராயன் எம்.பி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட குழு செயலாளர் இசாக் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் பொதுச் செயலாளர் சேகர் வேலை அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் பி ஆர் நடராஜன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார் திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த ஜவுளி தொழில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது உள்நாட்டு மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் ஜவுளித் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சுமை பணி தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் மருத்துவ வசதி இல்லை இழப்பீடு இல்லை வாழ்க்கைக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை சுமை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அரசு வழங்க வேண்டும் தெருவோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment